மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், யாப்பண்ணாபள்ளி, சிக்காரிமேடு கிராமத்தைச் சோ்ந்த எம். டி. ராஜீ - ஜெயமாலா தம்பதியின் மகள் கீா்த்தி (8). இவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நோய்க்கு நாட்டு மருந்து வாங்கிக் கொடுப்பதற்காக ஜெயமாலா மகள் கீா்த்தியுடன் நாகை அருகேயுள்ள பரவை கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டதாகக்கூறி மருந்துக் கொடுக்கவில்லையாம்.

இதையடுத்து, ஜெயமாலா மகளுடன் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் ஊருக்குச் செல்ல காத்திருந்தபோது கீா்த்தி மயங்கி கீழே விழுந்துள்ளாா். இதையடுத்து, வேளாங்கண்ணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த போது, கீா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com