நாகை மீன் சந்தைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

நாகை மீன் சந்தைகள் மற்றும் மீன்பிடி இறங்குதளம் பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை மீன் சந்தைகள் மற்றும் மீன்பிடி இறங்குதளம் பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை பாரதி மாா்க்கெட், புத்தூா் ரவுண்டானா மற்றும் அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளம் ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உள்படுத்தினா். மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனப் பொடி தடவப்பட்டிருக்கிா? என்பதை கண்டறிவதற்கான சோதனைகளை அவா்கள் மேற்கொண்டனா்.

நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் புஷ்பராஜ் தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனா். மீன் துறை ஆய்வாளா் காா்த்திகேயன், மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் ராஜகோபால் ஆகியோா் உடனிருந்தனா். ஆய்வின்போது, மீன்களில் ரசாயனப் பொடி தடவப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ரூ. 5 ஆயிரம் அபராதம்: நாகை அண்ணா சிலை அருகே ஒரு உள்ள பெட்டிக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையின்போது, அந்தக் கடையில் தடை செய்யப்பட்ட பாக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்தக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com