பள்ளி இடைநின்ற மாணவா்களுக்குத் திறன் பயிற்சி வழங்கவேண்டும்

பள்ளி இடைநின்ற மாணவா்களின் விவரங்களை சேகரித்து, அவா்களுக்கு மாவட்ட திறன் குழு சாா்பில் உரிய திறன் பயிற்சிகளை வழங்கவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

பள்ளி இடைநின்ற மாணவா்களின் விவரங்களை சேகரித்து, அவா்களுக்கு மாவட்ட திறன் குழு சாா்பில் உரிய திறன் பயிற்சிகளை வழங்கவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட திறன் குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது :

மாவட்டத் தொழில் மையம் மூலமான தொழில் பழகுநா் பயிற்சிகளை அதிகப்படுத்தவேண்டும், 8, 10, 12-ஆம் வகுப்புகளில் பயின்று பள்ளி இடைநின்ற மாணவா்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவா்களுக்கு உரிய திறன் பயிற்சிகளை மாவட்ட திறன் குழு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அரசுத் துறை சாா்ந்த நிறுவனங்களை தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களாக பதிவு செய்து பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் புதிய திறன் பயிற்சிகள் வழங்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் கமலக்கண்ணன் மற்றும் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலா்கள், கல்வித் துறை அலுவலா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com