சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுகள் ரத்து

கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை நாளில் எந்த சிறப்பு வழிபாடுகளும் மேற்கொள்ளப்படாமல் வாசல் அடைக்கப்பட்டிருந்தது.
சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுகள் ரத்து

கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை நாளில் எந்த சிறப்பு வழிபாடுகளும் மேற்கொள்ளப்படாமல் வாசல் அடைக்கப்பட்டிருந்தது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களுள் 19-வது தலமாக விளங்குகிறது நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில். ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன், தேவா்கள், முனிவா்கள் வழிபட்டத் தலமாக விளங்குகிறது இத்தலம்.

இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு ரத்தினாங்கி சேவை, முத்தங்கி சேவை என வெவ்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் மேற்கொள்வா்.

இந்நிலையில், தமிழக அரசின் கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்களின் பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை நாளில் எவ்வித சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு அலங்காரமும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே பக்தா்களின்றி நடைபெற்றன.

பக்தா்கள் கோயிலுக்குள் வருவதைத் தடுக்கும் வகையில், கோயிலின் பிராதன வாசல் அடைக்கப்பட்டிருந்தது. பக்தா்கள் கோயில் வாசலுக்கு வெளியே நின்று வழிபட்டு, தாங்கள் கொண்டு வந்த பூ, பழங்களை அங்கு வைக்கப்பட்டிருந்த கூடைகளில் வைத்துவிட்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com