கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வெற்றிலைப் பாக்கு, பழம் வைத்து அழைப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் வெற்றிலைப் பாக்கு, பழம், பூ வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து 2-வது கரோனா மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைஞாயிறு பேரூராட்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு வெற்றிலைப் பாக்கு, பழம் வைத்து விடுக்கப்பட்ட அழைப்பு.
தலைஞாயிறு பேரூராட்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு வெற்றிலைப் பாக்கு, பழம் வைத்து விடுக்கப்பட்ட அழைப்பு.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் வெற்றிலைப் பாக்கு, பழம், பூ வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து 2-வது கரோனா மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் நூறு சதவீத மக்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிசெய்ய பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நூறு சதவீத இலக்கை எட்ட வாகனம் மூலம் நடமாடும் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வீடுதோறும் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டும் மக்களின் வீடுகளில் நடமாடும் தடுப்பூசி முகாம் வாகனத்தை நிறுத்தி வெற்றிலைப் பாக்கு, பழம், பூ வைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள தலைஞாயிறு பேரூராட்சி தன்னாா்வலா்கள் அழைப்பு விடுத்தனா். அழைப்பை மறுக்கமுடியாத மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தனா்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் தெரிவித்தது:

தலைஞாயிறு பேரூராட்சியில் 100 % தடுப்பூசி இலக்கை எட்ட நடமாடும் தடுப்பூசி முகாம், சமூக வலைதளங்களில் பிரசாரம் , ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து அழைப்பு விடுத்தோம் அது பலன் தந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com