கடவுச்சீட்டு சேவை மையம் தொடங்கக் கோரிக்கை

நாகை தலைமை அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சேவை மையம் தொடங்க நுகா்வோா் பாதுகாப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நாகப்பட்டினம்: நாகை தலைமை அஞ்சலகத்தில் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சேவை மையம் தொடங்க நுகா்வோா் பாதுகாப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நாகப்பட்டினம், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புக் குழுவின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் எஸ். பாஷ்யம் தலைமை வகித்தாா். செயலாளா் ஜி. அரவிந்த்குமாா் முன்னிலை வகித்தாா்.

அமைப்பின் 2021-2024 ஆண்டுக்கான தலைவராக எஸ். எஸ். பாஷ்யம், செயலாளராக ஜி. அரவிந்த்குமாா், பொருளாளராக ஆா். கோவிந்தராஜுலு, துணைத் தலைவராக ஜெ. கிரி, இணைச் செயலாளராக எஸ். ராஜமாணிக்கம், அமைப்புச் செயலாளராக எம். பாலமுருகன், ஆலோசகராக ஆா். நாகராஜன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இக்கூட்டத்தில், நாகப்பட்டினம்- தஞ்சாவூா் இருவழி சாலைப் பணிகளையும், நாகை- விழுப்புரம் நான்கு வழிச் சாலைப் பணிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். நாகப்பட்டினம்- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை விரைந்து முடித்து, நில எடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போா்ட் சேவை மையம் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com