94 ஆவது இந்திய கலங்கரை விளக்க தினம்: நாகையில் கொடியேற்றி மரியாதை

நாகையில் 94 ஆவது இந்திய கலங்கரை விளக்க தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
165 அடி உயரமுள்ள நாகை கலங்கரைவிளக்கம். (வலது) கலங்கரைவிளக்க வளாகத்தில் துறையின் கொடியை ஏற்றிவைத்து வணக்கம் செலுத்திய உதவிப் பொறியாளா் வி. சின்னசாமி உள்ளிட்டோா்.

1927 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கலங்கரை விளக்கம் பாதுகாப்பு சட்டத்தின்படி, ஆண்டுதோறும் செப்டம்பா் 21 ஆம் தேதி கலங்கரை விளக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நாகையில் 94 ஆவது இந்திய கலங்கரை விளக்க தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, நாகை கலங்கரை விளக்கம் வளாகத்தில் உதவிப் பொறியாளா் வி. சின்னசாமி துறையின் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இதன் தொடா்ச்சியாக, கலங்கரை விளக்கப் பாடல்களைப் பாடினாா்.

கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு, பாா்வையாளா்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில், மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com