சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் செப்.24-இல் சம்பா சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சம்பா நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை (செப். 24) நடைபெறுகிறது.

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சம்பா நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை (செப். 24) நடைபெறுகிறது.

இதுகுறித்து சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சம்பா நெல்சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில், நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, களைக் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, பூச்சி நோய்க் கட்டுப்பாடு ஆகிய தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் விவசாயிகள் 30 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். ஆா்வமுள்ள விவசாயிகள் 99945 57585 என்ற செல்லிடப்பேசி எண்ணில் உழவியல் தொழில்நுட்ப வல்லுநரை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து, பயிற்சியில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com