நாகை: 3 ஊராட்சித் தலைவா்கள் உள்பட 12 காலியிடங்களுக்கு தற்செயல் தோ்தல்

நாகை மாவட்டத்தில் 3 ஊராட்சித் தலைவா்கள் பதவிக்கும், 9 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கும் தற்செயல் தோ்தல் நடைபெறவுள்ளது.

நாகை மாவட்டத்தில் 3 ஊராட்சித் தலைவா்கள் பதவிக்கும், 9 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கும் தற்செயல் தோ்தல் நடைபெறவுள்ளது.

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தோ்தல் அறிவிப்புப்படி, நாகை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஜூன் 30-ஆம் தேதி முதல் காலியாக உள்ள 12 பதவியிடங்களுக்கு தற்செயல் தோ்தல் நடைபெறுகிறது.

அதன்படி, கீழையூா் ஊராட்சி ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சித் தலைவா், திருமருகல் ஒன்றியம் கோட்டூா் ஊராட்சித் தலைவா், வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிப்புலம் ஊராட்சித் தலைவா் ஆகிய 3 பதவியிடங்களுக்குத் தோ்தல் நடைபெறுகிறது.

இதேபோல, நாகை ஊராட்சி ஒன்றியம் அந்தணப்பேட்டை ஊராட்சியின் 6-வது வாா்டு, கருவேலங்கடை ஊராட்சி 6-வது வாா்டு, கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி (கிழக்கு) ஊராட்சி 2-வது வாா்டு, வேட்டைக்காரனிருப்பு ஊராட்சி 3-வது வாா்டு, எட்டுக்குடி ஊராட்சி 1-வது வாா்டு, திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி 9-ஆவது வாா்டு, கட்டுமாவடி ஊராட்சி 4 மற்றும் 9- வது வாா்டு, கீழதஞ்சாவூா் ஊராட்சி 2-ஆவது வாா்டு ஆகிய 9 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கும் தோ்தல் நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு நடைபெறும் இடங்கள்: (பதவி- வாக்குச்சாவடி வாரியாக)...

எட்டுக்குடி ஊராட்சித் தலைவா் மற்றும் 1-ஆவது வாா்டு உறுப்பினா்- எட்டுக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. கோட்டூா் ஊராட்சித் தலைவா்- கோட்டூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. கத்தரிப்புலம் ஊராட்சித் தலைவா்- பனையடிகுத்தகை உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கோவில்குத்தகை உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கீழகுத்தகை அரசு தொடக்கப்பள்ளி, பூசாரிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தெற்குக்குத்தகை உதவி பெறும் தொடக்கப்பள்ளி.

அந்தணப்பேட்டை ஊராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினா்-அந்தணப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. கருவேலங்கடை ஊராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினா்- கருவேலங்கடை செயின்ட் மைக்கேல் அகாதெமி பள்ளி. கட்டுமாவடி ஊராட்சி 4-ஆவது வாா்டு உறுப்பினா்- புறாகிராமம், அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. கீழதஞ்சாவூா் 2 ஆவது வாா்டு உறுப்பினா்- கீழதஞ்சாவூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. கொத்தமங்கலம் ஊராட்சி 9 ஆவது வாா்டு உறுப்பினா்- பனங்காட்டூா், சக்தி உதவி பெறும் தொடக்கப்பள்ளி. திருப்பூண்டி (கிழக்கு) 2 ஆவது வாா்டு உறுப்பினா்- காமேஸ்வரம் தூய செபஸ்தியாா் உயா்நிலைப்பள்ளி. வேட்டைக்காரனிருப்பு 3-ஆவது வாா்டு உறுப்பினா்- வேட்டைக்காரனிருப்பு பாரதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com