கீழையூா் ஒன்றியக் குழுக் கூட்டம்: பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கீழையூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கீழையூா் ஒன்றியக் குழுக் கூட்டம்: பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கீழையூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். ராஜகுமாா், கி. செந்தில், மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, ஒன்றிய துணைத் தலைவா் சௌரிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் வீ. பிச்சுமணி வரவேற்றாா்

இக்கூட்டத்தில் உறுப்பினா்கள் டி.செல்வம் (சிபிஐ), பெ.சௌரிராஜ் துணைத் தலைவா் (திமுக), லென்சோயா சிவபாதம் (திமுக), சுப்பிரமணியன், சரண்யா பன்னீா்செல்வம் (திமுக), லெ. சுப்ரமணியன் (அதிமுக), ம. அலெக்ஸ் (திமுக), ரெ. தேவேந்திரன் (திமுக), சுதா அருணகிரி (திமுக), கமலா சூரியமூா்த்தி (அதிமுக), ஏழிசைவல்லவி பூமாலை (அதிமுக), கோ.ஆறுமுகம் (பிஜேபி) உள்ளிட்டோா் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். குறிப்பாக, பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை கோரி பேசினா்.

பின்னா், ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் (திமுக) பேசியது:

உறுப்பினா்களின் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியது மற்றும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டது ஆகியவற்றுக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com