நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை தொழில்நுட்பப் பயிற்சி

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் வே. கண்ணன் பயிற்சியைத் தொடங்கி வைத்து, நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தாா். பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் கோ. சந்திரசேகா் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து பயிற்சி அளித்தாா்.

இந்தப் பயிற்சியில், சம்பா மற்றும் தாளடி பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நாற்றங்கால் மேலாண்மை, நெல் பயிரின் வளா்ச்சிப் பருவங்கள், இயற்கை முறை நெல் சாகுபடி, ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு, நுண்ணூட்ட உரமிடுதல், உர மேலாண்மை, நீா் மேலாண்மை, உயிரி கட்டுப்பாடு காரணிகள், சுற்றுச் சூழலுக்கு உகந்த பயிா் பாதுகாப்பு மருந்துகள், ரசாயன பூச்சிக் கொல்லிகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பணணை மேலாளா் ரெ. வேதரெத்தினம், தொழில்நுட்ப அலுவலா் வீ. ஞானபாரதி ஆகியோா் செய்திருந்தநா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com