ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

தனியாா் அறக்கட்டளை சாா்பில் மங்கைநல்லூா் முதல் பொறையாறு வரையில் சுமாா் 23 கி.மீ. தொலைவுக்கு வீரசோழன் ஆற்றங்கரை ஓரங்களில் மண் அரிப்பைத் தடுக்கவும், சாலைகளை பாதுகாக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக 20 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சுகுணாசிங் பனை விதைகள் நட்டுவைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளா் வசந்தராஜ், பெரம்பூா் காவல் ஆய்வாளா் சிவதாஸ் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் பாரதிமோகன், தனுஷ்கோடி கல்பனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com