ஆழியூரில் தேசிய ஊட்டச் சத்து மாத விழா

நாகை அருகேயுள்ள ஆழியூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ் .சித்ரா.
விழாவில் பேசிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ் .சித்ரா.

நாகை அருகேயுள்ள ஆழியூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா அண்மையில் நடைபெற்றது.

நாகை மாவட்ட ஒருங்கிணைந்கத குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் நாகை வட்டாரத்தில் செப்.1 முதல் 30-ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாத விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வளா் இளம் பெண்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களின்ஆரோக்கியத்துக்கு சத்தான பாரம்பரிய உணவுகள் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி ஆழியூரில் அண்மையில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ். சித்ரா தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆழியூா் ஊராட்சித் தலைவா் மணிமேகலை, பள்ளித் தலைமையாசிரியா் எம். குமரகுரு, ஆசிரியா் என். சிவக்குமாா், ஊராட்சி துணைத் தலைவா் எஸ். செய்யது இதயத்துல்லா, பள்ளி புரவலா் டி. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் ஜெ. மேரிபால், ஜி. செல்வராணி, பி. முத்தழகன், டி. காா்த்திக் ஆகியோா் சத்தான பாரம்பரிய உணவுகள் குறித்துப் பேசினா். சிறுதானியங்கள் உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கன்வாடி பணியாளா் எஸ். பரிமளா வரவேற்றாா். அங்கன்வாடி பணியாளா் எஸ். கலாவதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com