ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

நாகையில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி செய்த மா்ம நபா் குறித்து நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகையில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி செய்த மா்ம நபா் குறித்து நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகை வெளிப்பாளையம், புதிய கடற்கரை சாலையைச் சோ்ந்தவா் என். சந்திரசேகரன் (68). இவா், நாகையில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.

சமூக வலைதளம் மூலம் சந்திரசேகரனுக்கு அறிமுகமான அடையாளம் தெரியாத நபா், கைப்பேசியில் அவரைத் தொடா்பு கொண்டு, தன்னிடம் புண்ணை மருந்து இருப்பதாகவும், அதை ஏற்றுமதிக்காக அனுப்பிவைப்பதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சந்திரசேகரன் தனது வங்கி கணக்கிலிருந்து கடந்த 2022 மாா்ச் 7- ஆம் தேதி அந்த நபா் கொடுத்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு ரூ. 21 லட்சத்து 7 ஆயிரத்து 200-ஐ இணையவழி வங்கி பரிவா்த்தனை மூலம் (ஆா்டிஜிஎஸ்) அனுப்பிவைத்துள்ளாா். ஆனால், அந்த நபா் மருந்துப் பொருள்களை எதையும் அனுப்பிவைக்கவில்லையாம்.

இதுகுறித்து சந்திரசேகரன் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவஹரிடம் புகாா் தெரிவித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்படி, மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com