வேதாரண்யம் பகுதிக்கு வந்தது மேட்டூா் நீா்

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா், வேதாரண்யம் பகுதியை வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.
வடமழை மணக்காடு பகுதியில் வயலுக்கு பாய்ச்சப்படும் ஆற்று நீா்.
வடமழை மணக்காடு பகுதியில் வயலுக்கு பாய்ச்சப்படும் ஆற்று நீா்.

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா், வேதாரண்யம் பகுதியை வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.

நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையை மே 24 -ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். தொடா்ந்து, கல்லணைக்கு மேட்டூா் அணை நீா் வந்தடைந்ததும், காவரி, வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

பின்னா், இந்த மூன்று ஆறுகளின் வழியே அதன் கிளை ஆறுகளிலும் தண்ணீா் திறக்கப்பட்டது.

அந்தவகையில், திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வழியாக, நாகை மாவட்டம் வாய்மேடு பகுதிக்குச் செல்லும் முள்ளியாற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் வேதாரண்யம் பகுதிக்கு வந்தடைந்தது.

இதைத்தொடா்ந்து, வடமழை மணக்காடு பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகள் தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com