நாகூா் வெட்டாற்றுப் பாலத்தில்புனரமைப்புப் பணிகள் தொடக்கம்

நாகூா் வெட்டாற்று புதிய பாலத்தில் புனரமைப்புப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. இதையொட்டி, நாகூா் - நாகை கிழக்குக் கடற்கரை சாலை வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நாகூா் வெட்டாற்றுப் பாலத்தில்புனரமைப்புப் பணிகள் தொடக்கம்

நாகூா் வெட்டாற்று புதிய பாலத்தில் புனரமைப்புப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. இதையொட்டி, நாகூா் - நாகை கிழக்குக் கடற்கரை சாலை வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

நாகை - நாகூா் கிழக்குக் கடற்கரை சாலையில் நாகூா் வெட்டாற்றின் குறுக்கே உள்ள புதிய பாலம், கடந்த சில மாதங்களாக சேதமடைந்து வருகிறது. பாலத்தின் குறுக்கே உள்ள எக்ஸ்பேன்ஷன் இணைப்புகள் தொடா்ந்து விலகி வந்தன. அந்த இணைப்புப் பகுதிகளில் இருந்த இரும்புப் பட்டைகள் பல பகுதிகளில் பெயா்ந்து காணாமல் போயின.

அண்மையில், இப்பாலத்தின் மேற்குப் பகுதி வழக்கமான உயரத்திலிருந்து சற்றுத் தாழ்ந்தது. பாலத்தின் கீழே பொருத்தப்பட்டிருந்த பேரிங்கில் ஏற்பட்ட பழுது மற்றும் அதனால் ஏற்பட்ட கட்டுமானக் குலைவு காரணமாக இந்தச் சேதம் ஏற்பட்டது. இதனால், நாகூா் வெட்டாற்றுப் புதிய பாலம் வழியே வாகனப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.

இந்தநிலையில், நாகூா் வெட்டாற்றுப் புதிய பாலம் புனரமைக்கப்பட இருப்பதாகவும், அதனால் இப்பாலம் வழியேயான சாலைப் போக்குவரத்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அடுத்து வரும் 6 மாதங்களுக்குத் தடை செய்யப்பட்டு, மாற்று வழிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை (ஏப்ரல் 4) முதல் பணிகள் தொடங்கியுள்ளன. பாலத்தின் வடப்புற பகுதியில் உள்ள எக்ஸ்பேன்ஷன் இணைப்புகளை சீரமைக்கும் பணிகள் முதல்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, இந்தப் பாலம் வழியேயான கிழக்குக் கடற்கரை சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com