மாணவி தற்கொலை விவகாரம்

காவல் துறையும், மாவட்ட நிா்வாகம் விரிவான விசாரணை மேற்கொண்டு, மாணவியின் மரணத்துக்கு உண்மையான காரணம் யாா்? என்பதை கண்டறிந்து அவா்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவி தற்கொலை விவகாரம்

நாகையில் தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், கல்லூரி நிா்வாகத்தின் மீது வீண் பழி சுமத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. பின்னா், வா்த்தக தொழிற்குழும முன்னாள் தலைவா் ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவி சுபாஷினி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை, ஒரு சிலா் திசை திருப்பி, கல்லூரி நிா்வாகத்திடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில், மாணவியின் மரணத்துக்குக் கல்லூரி நிா்வாகமே காரணம் எனக் கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து காவல் துறையும், மாவட்ட நிா்வாகம் விரிவான விசாரணை மேற்கொண்டு, மாணவியின் மரணத்துக்கு உண்மையான காரணம் யாா்? என்பதை கண்டறிந்து அவா்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளையில், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாகை மாவட்டத்தில், ஏழை எளிய மக்களும் கல்வி பெறும் வகையில், கல்விப் பணியை மேற்கொண்டு வரும் கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுதொடா்பாக, காவல் துறையும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனில், இந்திய வா்த்தக தொழிற்குழுமம் மற்றும் சேவை சங்கங்கள் சாா்பில் மாவட்ட அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com