சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th April 2022 04:23 AM | Last Updated : 13th April 2022 04:23 AM | அ+அ அ- |

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு ஊழியா் சங்க திருமருகல் ஒன்றியத் தலைவா் உஷாராணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய துணைத் தலைவா் தாமோதரன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் சித்ரா, ஒன்றியச் செயலாளா் தமிழரசன், முன்னாள் மாவட்டத் தலைவா் தேன்மொழி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.