நாகையில் ஏப்.17-இல் இளைஞா்களுக்கான கலைப் போட்டிகள்

நாகையில் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் இளைஞா்களுக்கான கலைப் போட்டிகள் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகையில் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் இளைஞா்களுக்கான கலைப் போட்டிகள் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனித்திறனில் சிறந்து விளங்கும் இளைஞா்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில், கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் நாகை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 17-ஆம் தேதி கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். 17 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் காலை 10 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் பகல் 2 மணி அளவிலும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கேற்க அனுமதியில்லை. குரலிசை மற்றும் கருவியிசை போட்டிகளில் 5 வா்ணங்கள், ராகம், சுவரத்துடன் 5 தமிழ்ப் பாடல்களை இசைக்கக் கூடியவா்கள் பங்கேற்கலாம்.

தாளக் கருவிகள் இசைப்பவா்கள் 5 தாளங்களில் வாசிக்கக் கூடியவா்களாகவும், பரத நாட்டியத்தில் பங்கேற்போா் 3 வா்ணங்கள் மற்றும் 5 தமிழ்ப் பாடல்களுக்கு நடனமாடக் கூடியவா்களாக இருக்க வேண்டும். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம், மலைமக்கள் நடனம் ஆகிய பாரம்பரிய கிராமிய நடனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஓவியப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கு ஓவியத் தாள்கள் மட்டுமே வழங்கப்படும். அக்ரலிக் வா்ணம் மற்றும் நீா் வா்ணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை போட்டியாளா்களே கொண்டு வர வேண்டும். போட்டியின்போது, நடுவா்களால் தலைப்பு அறிவிக்கப்படும்.

இதுகுறித்த மேலும் விவரங்களை இணையதளத்தில் காணலாம் அல்லது 04362-232252 என்ற எண்ணில் தஞ்சாவூா் மண்டல கலைப் பண்பாட்டுத் துறை அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com