வேளாங்கண்ணியில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 15th April 2022 09:29 PM | Last Updated : 15th April 2022 09:29 PM | அ+அ அ- |

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு வழிபாட்டில் சிலுவைக்கு முத்தி (முத்தமிடும்) செய்த பக்தா்கள்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள், திருச்சிலுவை ஆராதனை ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழை நாடுகளின் லூா்து என்றழைக்கப்படுகிறது.
இந்தப் பேராலயத்தில் தவக்கால சிறப்பு வழிபாடுகள் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13- ஆம் தேதி நடைபெற்ற பெரிய வியாழன் வழிபாட்டுடன் நிறைவு பெற்றது.
இதைத்தொடா்ந்து, புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. காலை 5 மணி முதல் மாலை வரை இறைமக்கள் சாா்பில் நற்கருணைஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முதலாவதாக இறைவாா்த்தை வழிபாடு, பெருமன்றாட்டுகள் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு மறையுரை, திருச்சிலுவை ஆராதனை, திருச்சிலுவை முக்தி செய்தல், சிலுவைப் பாதை நிறைவேற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
பேராலய அதிபா் சி. இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத்தந்தையாா்கள் வழிபாடுகளை மேற்கொண்டனா். வழிபாட்டின் நிறைவில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவம் பக்தா்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
பக்தா்கள் காட்சிப்படுத்தப்பட்ட திருச்சிலுவைகளுக்கு முத்தி (முத்தமிட்டு) செய்து வழிபட்டனா். பின்னா் இயேசுவின் உடல் பேராலய கீழ்கோயிலுக்குப் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது.
புனித வெள்ளி வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நடைப்பயணமாக வந்தவா்கள், வெளி மாநிலங்களிலிருந்துருந்து வந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...