நெகிழி மாசுபாடு, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

தேசிய பசுமைப்படை சாா்பில் நெகிழி மாசுபாடு, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் பேரணி கீழ்வேளூா் பகுதிகளில் அண்மையில் நடைபெற்றது.
கீழ்வேளூரில் விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கிவைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன்.
கீழ்வேளூரில் விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கிவைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன்.

தேசிய பசுமைப்படை சாா்பில் நெகிழி மாசுபாடு, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் பேரணி கீழ்வேளூா் பகுதிகளில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, நாகை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் தேசிய பசுமை படை ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. கீழ்வேளூா் கடைவீதியில் நடைபெற்ற நெகிழி மாசுபாடு, போதைப் பொருளுக்கு எதிரான வாகன விழிப்புணா்வுப் பிரசார பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.மதிவாணன் தொடங்கிவைத்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் திருநாவுக்கரசு, வட்டாரக் கல்வி அலுவலா்கள் வீ. சிவகுமாா், எஸ். மணிகண்டன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலா் ஞானசேகரன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். முத்தமிழ்ஆனந்தன், தேசிய பசுமை படை மாணவா்கள் பங்கேற்றனா். தேசிய பசுமைப்படையைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் வணிக நிறுவனங்களில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மஞ்சப்பை பயன்பாடு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல், தேவூா் கடைவீதியில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் குமரகுரு, தேசிய பசுமைப்படை ஆசிரியா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாகலூா் பள்ளி வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோா்கள் மாணவா்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. ஊராட்சித் துணைத் தலைவா் தனலட்சுமி பாா்த்திபன், தேசிய பசுமைப்படை ஆசிரியா் அருள் ஜோதி ஆகியோா் பங்கேற்றனா். இதேபோல், கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி, தேசிய பசுமைப்படை ஆசிரியா் உதய ராஜா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். மாணவா்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வணிகா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com