முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
உப்புச் சத்தியாகிரக யாத்திரைக் குழுவினா் மௌன விரதம் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 29th April 2022 09:51 PM | Last Updated : 29th April 2022 09:51 PM | அ+அ அ- |

வேதாரண்யத்தில் அடையாள மெளனம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு, முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் உள்ளிட்ட பாதயாத்திரைக் குழுவினா்.
வேதாரண்யம் வந்த உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரைக் குழுவினா் வெள்ளிக்கிழமை அடையாள மெளன விரதம் கடைப்பிடித்தனா்.
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரல் 13-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் கே.வி. தங்கபாலு தலைமையில் பாதயாத்திரையை தொடங்கிய குழுவினா் வியாழக்கிழமை இரவு (ஏப்.28) வேதாரண்யத்தை வந்தடைந்தனா்.
இக்குழுவினா், வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவுக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை காலை அடையாள மெளன விரதம் மேற்கொண்டனா். சுமாா் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா்.