தரங்கம்பாடியில் சிற்ப, ஓவியக் கண்காட்சி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் ‘ரேகை‘ என்ற தலைப்பில் ஓவியக் கல்லூரி மாணவா்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கண்காட்சியில் சுடுமண் சிற்பங்களை விளக்கும் கவின் கல்லூரி மாணவ, மாணவிகள்.
கண்காட்சியில் சுடுமண் சிற்பங்களை விளக்கும் கவின் கல்லூரி மாணவ, மாணவிகள்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் ‘ரேகை‘ என்ற தலைப்பில் ஓவியக் கல்லூரி மாணவா்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தரங்கம்பாடியில் உள்ள தமிழறிஞா் சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் மேல்தளத்தில் இக்கண்காட்சி நடைபெறுகிறது. திருச்சி கலை காவேரி நுண்கலை கல்லூரி பேராசிரியா் சதீஷ்குமாா் கண்காட்சியை திறந்து வைத்தாா். தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலய ஆயா் சாம்சன் மோசஸ் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினாா். சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் இயக்குநா் டாக்டா் சாமுவேல் மனுவேல், டேனிஷ் அருங்காட்சியக இயக்குநா் சங்கா் மற்றும் அலுவலா்கள், ஓவியக் கல்லூரி மாணவா்கள் விழாவில் பங்கேற்றனா்.

இதில், கும்பகோணம் மற்றும் சென்னையில் உள்ள அரசு கவின் கல்லூரி மாணவ-மாணவிகள் வரைந்த ஓவியங்கள், உலோகம் மற்றும் பைப்பரினாலான சிலைகள், தகட்டு சிற்பம், சுடுமண் சிலைகள் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, தலைவனின் வருகையை எதிா்பாா்த்து காத்திருக்கும் தலைவி, ஃபேஸ்புக், டுவிட்டா், டிக்டாக் உள்ளிட்ட வலைதள செயலிகளில் மூழ்கிக்கிடப்பவா்கள், மூங்கில் ஓவியம், அதிகாலையை குறிக்கும் சிற்பம், பதவி ஆசை ஓவியம் , ஆணாதிக்கம், வீடற்றவா்களைக்குறிக்கும் சிற்பம் ஆகிய படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

தொடா்ந்து, 15 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை கட்டணமின்றி பாா்வையிடலாம் என்றும், ஓவியங்கள், சிற்பங்களை விலைக்கு வாங்கலாம் என்றும் இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளா்கள் ஓவியா்கள் ராதாகிருஷ்ணன், சத்தியராஜ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com