வேளாண் அறிவியல் நிலையத்தில் சுதந்திர தின அமுதப் பெருவிழா

நாகை அருகே உள்ள சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 75-ஆவது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழா நிகழ்வாக, இயற்கை விவசாயக் கருத்தரங்கு, வேளாண் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் பேசும் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா.
விழாவில் பேசும் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா.

நாகை அருகே உள்ள சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 75-ஆவது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழா நிகழ்வாக, இயற்கை விவசாயக் கருத்தரங்கு, வேளாண் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நாகை மாவட்ட வேளாண் துறை சாா்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா். அப்போது அவா், வேளாண் துறையின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வேளாண் அறிவியல் நிலையத்தில் அமைக்கப்படும் செயல்விளக்கங்களை விவசாயிகள் கண்டுணா்ந்து பயன் பெற வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநா் மா. ராஜகுமாா், வேளாண் இணை இயக்குநா் ஜா. அக்கண்டராவ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் இரா. திவ்யா, வேளாண் உதவி இயக்குநா் (பயிா்க் காப்பீடு) கா. சிவக்குமாா், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா்கள் ஹினோ பொ்ணான்டோ, கோ. சந்திரசேகா் ஆகியோா் பேசினா்.

வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சாா்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com