முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தரங்கம்பாடி கல்லூரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
By DIN | Published On : 30th April 2022 09:38 PM | Last Updated : 30th April 2022 09:38 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ’ தமிழ்மொழியின் தனித்துவம்’’ என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரியின் செயலா் அருட்சகோதரரி கருணா ஜோசபாத் தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் வீரா. காமராசன் தமிழ்மொழியின் தனித்துவம் குறித்து சிறப்புரையாற்றினாா். கல்லூரி நிா்வாகி அருட்சகோதரி வின்சென்ட் அமலா, தாளாளா் அருட்சகோதரி மொ்சி தங்கம், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் இந்துமதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை தமிழ்த் துறைத் தலைவா் முனைவா் வி. புகழேந்தி மற்றும் முனைவா் கா. வினோத்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.