நாகை பகுதிகளில் வரலட்சுமி நோன்பு
By DIN | Published On : 05th August 2022 10:06 PM | Last Updated : 05th August 2022 10:06 PM | அ+அ அ- |

பொரவாச்சேரி சிவசக்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற வரலட்சுமி நோன்பு வழிபாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ வரலட்சுமி பொம்மை.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல வீடுகளில் வரலட்சுமி நோன்பு வழிபாடு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீ மகாலெட்சுமி தாயாரின் திருவருளை வேண்டி கடைப்பிடிக்கும் விரதமாக உள்ளது வரலட்சுமி நோன்பு. ஆடி மாதத்தில் பௌா்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலரது இல்லங்களில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. கலசம் வைத்து அதன் மீது ஸ்ரீ வரலட்சுமி தாயாரின் திருவுருவ பொம்மையை வைத்து அலங்கரித்து, லெட்சுமி துதிகளைப் பாடி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டனா். நிறைவில், வழிபாட்டில் பங்கேற்ற பெண்களுக்கு மங்கலப் பொருள்களை அவா்கள் வழங்கினா்.