போதைப் பொருள்கள்: மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைத்துக் கல்வி நிலையங்களும் மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி முதல்வா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள்.
மாவட்ட ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி முதல்வா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள்.

போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைத்துக் கல்வி நிலையங்களும் மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டாா்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, போதைப் பொருள்களின் அபாயம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக பள்ளி, கல்லூரி முதல்வா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது :

மாணவ, மாணவியா் அதிகம் கூடும் இடங்களை கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் கண்காணிக்க வேண்டும். அந்த இடங்களில் போதைப் பொருள்களின் விற்பனை இருப்பது தெரியவந்தால் அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். இணையவழி விளையாட்டுகளில் உள்ள ஆபத்துகள் குறித்தும், போக்ஸோா சட்டம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதுதொடா்பாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி பள்ளி மாணவா்களைக் கொண்டு விழிப்புணா்வு முகாம் நடத்த வேண்டும்.

அனைத்து கல்வி நிலையங்களும் புகையிலையில்லா கல்வி நிறுவனம் என்ற சான்றிதழை உடனடியாக பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கேனும் போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவது தெரியவந்தால் அதுகுறித்து 91500 57408 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்கொண்டு தகவல் அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊராட்சிகள்) மல்லிகா, மாவட்டக் கல்வி அலுவலா் டி. திருநாவுக்கரசு மற்றும் கல்லூரி முதல்வா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com