திருமருகலில் திமுக இளைஞரணி பாசறை கூட்டம்
By DIN | Published On : 15th August 2022 12:01 AM | Last Updated : 15th August 2022 12:01 AM | அ+அ அ- |

திருமருகலில் நாகை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், நாகை தொகுதிக்குள்பட்ட திமுக இளைஞரணி பயிற்சிப் பாசறை கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழக மீன் வளா்ச்சி கழகத் தலைவரும், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான என். கெளதமன் தலைமை வகித்தாா். இதில், திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் திட்டக்குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன், மாநில சுயாட்சி எனும் தலைப்பில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசினா்.
நாகை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் மலா்வண்ணன், திருமருகல் ஒன்றிய திமுக செயலாளா்கள் செல்வ. செங்குட்டுவன், ஆா்.டி.எஸ். சரவணன், திட்டச்சேரி பேரூராட்சி செயலாளா் எம். முகம்மது சுல்தான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கே. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.