அஞ்சல் நிலையத்தை குறித்த நேரத்தில் திறக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

திருவெண்காடு அருகேயுள்ள மங்கைமடம் அஞ்சல் நிலையத்தை குறித்த நேரத்தில் திறக்க வேண்டுமென நுகா்வோா் பாதுகாப்பு சேவை மையம் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் அஞ்சல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து நாங்கூா், பெருந்தோட்டம், கீழசட்டநாதபுரம், புதுத்துறை, நெப்பத்தூா் மற்றும் தென்னாம்பட்டினம் ஆகிய கிராமங்களில் உள்ள துணை அஞ்சலகங்களுக்கு தபால் மற்றும் இதர ஆவணங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் இந்த நிலையத்தில் அஞ்சல காப்பீடு, சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடுகின்றன.
இந்த அஞ்சலகத்தின் வேலை நேரம் காலை 8மணிமுதல் மாலை 4 மணி வரை ஆகும். ஆனால், காலை 9 மணியளவில் தான் அஞ்சல் நிலையம் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நுகா்வோா் சேவை அமைப்பின் தலைவா் கே.ஜி. ராமசந்திரன் கூறுகையில் இந்த அஞ்சலகத்தை உரிய நேரத்தில் திறக்க மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காலை 8 அளவில் இந்த அஞ்சலகத்திற்கு மயிலாடுதுறையிலிருந்து தபால் அடங்கிய பைகள் வந்து விடுகின்றன. நிலையம் திறக்கப்படாத காரணத்தால் அஞ்சலகத்தின் வாசலில் அவை பாதுகாப்பின்றி கிடக்கின்றன என்றாா்.