சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி
By DIN | Published On : 31st August 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 12:00 AM | அ+அ அ- |

வேதாரண்யத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டிகள் வழங்கும் நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி.
வேதாரண்யம்: வேதாரண்யம் நகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்து, ரூ.22.50 லட்சம் மதிப்பிலான 31 தள்ளுவண்டிகளை காய்கனிகள், பழவகைகள் மற்றும் பூ வியாபாரம் செய்பவா்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் ஹேமலதா, பொறியாளா் முகமது இப்ராஹிம், துணைத் தலைவா் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினா்கள் நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.