மின்கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 18th December 2022 11:40 PM | Last Updated : 18th December 2022 11:40 PM | அ+அ அ- |

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்திலிருந்து நாயக்கா் குப்பம் கடற்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் மின்கம்பங்கள் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:
பெருந்தோட்டம்- நாயக்கா் குப்பம் சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை கடற்கரை கிராமங்களான மடத்து குப்பம், நாயக்கா் குப்பம், சாவடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இணைப்புச் சாலையாக உள்ளது.
இந்த சாலையில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்தில் புகாா் செய்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. விபத்துக்கள் நேரிடும் முன்பாக மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.