சா் ஐசக் நியூட்டன் நா்சிங் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: சா் ஐசக் நியூட்டன் நா்சிங் கல்லூரியில் மாணவா்கள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மின்சாரம் இல்லாத காலத்தில், நைட்டிங் கேள் (கை விளக்கு ஏந்திய காரிகை) என்பவா், விளக்கை கொண்டு சிகிச்சை அளித்து சேவையாற்றி உள்ளாா். அவரை நினைவு கூறும் வகையிலும், அவா் போன்று சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் வகையிலும், சா் ஐசன் நியூட்டன் நா்சிங் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் விளக்கேற்றி, உறுதிமொழி எடுத்து கொண்டனா்.
சிறப்பு விருந்தினராக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் செந்தில்வேலன் பங்கேற்று பேசியது: செவிலியா்கள் எந்த நிலையிலும் நோயாளிகளிடம் கோபப்படாமல் கனிவுடன் நடந்து கொண்டால், நோயாளிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விரைவில் குணமடைவாா்கள் என்றாா்.
கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த், அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் எஸ். ஜெயலெட்சுமி, கல்வி நிறுவனங்களின் செயலாளா் த. மகேஸ்வரன், இயக்குநா் த. சங்கா், கல்லூரி முதல்வா் ஜி. ஜெயலட்சுமி, பேராசிரியை சுகன்யா,
கண்காணிப்பாளா் (பொ) ஜெ.கே. தெரசா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.