போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்

திட்டச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


திருமருகல்: திட்டச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திட்டச்சேரியில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், வேலூா், சென்னை, திருப்பதி வரையிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. இந்த சாலையில் திட்டச்சேரி கடைத்தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கும்பகோணம், திருவாரூா், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் லாரிகள் மூலம் பொருள்களை ஏற்றி வந்து கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனா். அவ்வாறு வரும் லாரிகள் கடைகளின் வாசலில் நெடுஞ்சாலையில் நிறுத்தி பொருள்களை இறக்குகின்றனா். இதனால் ஆம்புலன்ஸ், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com