முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி விடுதியில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு
By DIN | Published On : 07th February 2022 10:32 PM | Last Updated : 07th February 2022 10:32 PM | அ+அ அ- |

வேளாங்கண்ணி விடுதியில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமாரி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தி. ஞானப்பிரகாசம் (65). இவா், வேளாங்கண்ணியில் தனியாா் விடுதியில் அறை எடுத்து ஜனவரி 28-ஆம் தேதி முதல் தங்கியிருந்தாா். இந்நிலையில், ஞானப்பிரகாசம் விடுதி அறையில் மயங்கிய நிலையில் கிடந்தது பிப்.1-ஆம் தேதி தெரியவந்தது.
இதையடுத்து, அவா் விடுதி ஊழியா்கள் உதவியுடன் நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். கடந்த 4 நாள்களாக சிகிச்சையில் இருந்த ஞானப்பிரகாசம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.