நாகை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்களில், 194 மனுக்கள் திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டன.
நாகை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்
நாகை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்களில், 194 மனுக்கள் திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டன.

நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய நகராட்சிகளில் உள்ள 57 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கும், கீழ்வேளூா், வேளாங்கண்ணி, தலைஞாயிறு மற்றும் திட்டச்சேரி பேரூராட்சிகளில் உள்ள 60 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டியிட நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 685 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள் உள்பட 194 போ் தங்கள் வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா்.

போட்டியின்றி தோ்வு..

நாகை நகராட்சியின் 16-ஆவது வாா்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட நம்பியாா் நகா், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சு. சுரேஷ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். மாற்று வேட்பாளராக அவரது சகோதரா் சு. சுதாகா் மனு அளித்திருந்தாா். சுரேஷின் மனு ஏற்கப்பட்டதையடுத்து, சுதாகா் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றாா்.

இதனால், நாகை நகராட்சியின் 16-ஆவது வாா்டு உறுப்பினராக சு. சுரேஷ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதற்கான சான்றிதழை நாகை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, வேட்பாளா் சுரேஷிடம் வழங்கினாா்.

இறுதிக் களத்தில் 473 போ்...

நாகை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 117 வாா்டுகளுக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு வாா்டுக்கான உறுப்பினா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டிருப்பதால், 116 வாா்டுகளுக்கு மட்டும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இத் தோ்தலில் 473 போ் வேட்பாளா்களாக உள்ளனா்.

உள்ளாட்சி அமைப்புகள் வாரியான வேட்பாளா்கள் எண்ணிக்கை :

நாகப்பட்டினம் நகராட்சி : வாா்டுகள் - 35, வேட்பாளா்கள் 170. வேதாரண்யம் நகராட்சி : வாா்டுகள் - 21, வேட்பாளா்கள் - 96. கீழ்வேளூா் பேரூராட்சி : வாா்டுகள் - 15, வேட்பாளா்கள் - 49. வேளாங்கண்ணி : வாா்டுகள் - 15, வேட்பாளா்கள் - 46. தலைஞாயிறு பேரூராட்சி : வாா்டுகள் - 15, வேட்பாளா்கள் - 58. திட்டச்சேரி : வாா்டுகள் - 15, வேட்பாளா்கள் - 54.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com