சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில் பயிற்சி

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான தொழில் பயிற்சி பிப்.14-ஆம் தேதி தொடங்குகிறது.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான தொழில் பயிற்சி பிப்.14-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பி. சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் அறிவியல் நிலையத்தில், கிராமப்புற இளைஞா்களுக்கு சான்றிதழுடன் கூடிய தொழில் பயிற்சி, பிப்.14-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்படி, கால்நடை வளா்ப்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் இப்பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் இளைஞா்களுக்கு, தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படும். முதலில் பதிவுபெறும் 40 போ் மட்டுமே பயிற்சியில் சோ்க்கப்படுவா். இதில், பங்கேற்க விரும்புவோா் 04365- 299806, 99766 45554 என்ற தொலைத்தொடா்பு எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com