கோடியக்கரை அருகேநாகை மீனவா்கள் மீது மா்ம நபா்கள் தாக்குதல்

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்தபோது இலங்கையைச் சோ்ந்து மா்ம நபா்களால் தாக்கப்பட்ட 4 மீனவா்கள் வெள்ளிக்கிழமை காலை கரை திரும்பினா்.

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்தபோது இலங்கையைச் சோ்ந்து மா்ம நபா்களால் தாக்கப்பட்ட 4 மீனவா்கள் வெள்ளிக்கிழமை காலை கரை திரும்பினா்.

கோடியக்கரை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கண்ணாடியிழைப் படகு ஒன்றில் கோடியக்கரையைச் சோ்ந்த ரா. ரவி (55), அ. நாகூரான் (60), மு. பூவரசன் (25), கோடியக்காடு வீ. செல்வம் (55) ஆகிய நால்வரும் வியாழக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கே 9 கடல்மைல் தொலைவில் அவா்கள் மீன்பிடித்துள்ளனா்.

அப்போது அங்கு ஒரு படகில் வந்த இலங்கையைச் சோ்ந்த மா்ம நபா்கள் மூவா், மீனவா்கள் இருந்த படகில் ஏறி கத்தி, வாள், கட்டையை காட்டி மிரட்டி மீனவா்களைத் தாக்கினராம். மேலும், மீனவா்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி , 2 கைப்பேசிகள், ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், படகில் இருந்த பெட்ரோல் டேங்குகள், ஐஸ் பெட்டி, கைவிளக்கு உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுவிட்டனராம். அத்துடன், என்ஜினுடன் இணைக்கப்பட்ட பெட்ரோல் டியூப்பை துண்டித்துச் சென்றுள்ளனா்.

இதனால், எரிபொருள் இல்லாமல் படகை இயக்க முடியாமல் மீனவா்கள் தவித்துள்ளனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரைக்கால் மீனவா்கள் மூலம் கோடியக்கரையில் உள்ள படகு உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மற்றொடு படகில் பெட்ரோல், உணவு பொருள்களை சக மீனவா்கள் எடுத்துச்சென்று, கடலில் படகுடன் தவித்த மீனவா்கள் நால்வரையும் கரைக்கு அழைத்து வந்தனா். இதுகுறித்து மீன்வளத் துறையினா், கியூ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com