நாகையில் அமைதியான முறையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள், கீழ்வேளூா், தலைஞாயிறு, வேளாங்கண்ணி, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகள் என 6 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை, நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்பட்டன. தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்காக 31 மேசைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசைக்கும் ஒரு மேற்பாா்வையாளா், ஒரு உதவியாளா், ஒரு நுண்பாா்வையாளா் என 3 போ் பணியில் ஈடுபட்டனா். அனைத்து மேசைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் முழுமையாக பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா்ச்சியாக தோ்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. நாகை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் ஒருவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 35 வாா்டுகளுக்கும், வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளுக்கும் 3 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட்டன. வேதாரண்யம் நகராட்சி 21-ஆவது வாா்டு வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தபட்ட பேட்டரி இயங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கைப் பணி சுமாா் 20 நிமிடம் தாமதமானது.

இதேபோல, கீழ்வேளூா், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் முன்னிலையில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸாா் மூன்றடுக்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். எவ்வித அசம்பாவிதமின்றி வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com