சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சி

நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நாள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
நாகை சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சியைத் தொடங்கிவைத்த எஸ்.பி. கு. ஜவஹா்.
நாகை சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சியைத் தொடங்கிவைத்த எஸ்.பி. கு. ஜவஹா்.

நாகப்பட்டினம்: நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நாள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தொடங்கிவைத்து மேலும் அவா் பேசியது:

சாலை விபத்துகளால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்கவேண்டும். ஒரு இடத்துக்குச் செல்லும்போது முன்னதாக புறப்பட்டு செல்லும் பழக்கத்தை கட்டாயப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இதனால் பதட்டமின்றி பாதுகாப்புடன் செல்ல முடியும். சாலை விதிகளின்படி வாகனங்களை இயக்கினால் விபத்துக்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும் என்றாா். சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த், பள்ளி இயக்குநா் சங்கா், நாகை ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன், வேளாங்கண்ணி காவல் நிலைய ஆய்வாளா்ஆனந்தராஜ், பள்ளி முதல்வா் வகீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com