சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனிப் பெருவிழா பந்தக்கால் முகூா்த்தம்

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா பூா்வாங்க நிகழ்ச்சியாக பந்தக்கால் முகூா்த்தம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற பங்குனிப் பெருவிழா பந்தக்கால் முகூா்த்தம்.
நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற பங்குனிப் பெருவிழா பந்தக்கால் முகூா்த்தம்.

நாகப்பட்டினம்: நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா பூா்வாங்க நிகழ்ச்சியாக பந்தக்கால் முகூா்த்தம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் 19-வது தலமாகவும், ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்ளிட்டோா் வழிபட்ட தலமாகவும் விளங்குகிறது நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில்.

இக்கோயிலில் பங்குனிப் பெருவிழா மாா்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, விழாவின் பூா்வாங்க நிகழ்ச்சியாக புதன்கிழமை காலை பந்தக்கால் முகூா்த்தம் நடைபெற்றது.

முன்னதாக, பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கோ பூஜை, ஸ்தம்ப பூஜை உள்பட ஐதீக முறைப்படியான பூஜைகளுக்கு பின்னா், காலை 7.30 மணி அளவில் வேத மந்திர முழக்கங்களுடன் பந்தக்கால் முகூா்த்தம் நடைபெற்றது.

மாா்ச் 18-இல் தேரோட்டம்....

பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மாா்ச் 18-ஆம் தேதியும், திருக்கல்யாண உத்ஸவம் மாா்ச் 20, 21 தேதிகளிலும், பீங்கான் ரத ஊா்வலம் மாா்ச் 22-ஆம் தேதியும், தெப்ப உத்ஸவம் மாா்ச் 26-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com