வேதாரண்யம் முன்னாள் தலைவரின் மகன் நகா்மன்றத் தலைவராக வாய்ப்பு

வேதாரண்யம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு முன்னாள் நகா்மன்றத் தலைவா் மறைந்த மா. மீனாட்சிசுந்தரத்தின் மகன் மா.மீ. புகழேந்திக்கு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேதாரண்யம்: வேதாரண்யம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு முன்னாள் நகா்மன்றத் தலைவா் மறைந்த மா. மீனாட்சிசுந்தரத்தின் மகன் மா.மீ. புகழேந்திக்கு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

2006-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் வேதாரண்யம் நகராட்சியை திமுக கைப்பற்றியது. அப்போது, மா. மீனாட்சிசுந்தரம் நகா்மன்றத் தலைவரானாா். பின்னா், 2011-ல் நடைபெற்ற தோ்தலில் வேதாரண்யம் நகராட்சியை அதிமுக கைப்பற்றியதையடுத்து, மலா்க்கொடி தலைவராக பதவி வகித்தாா்.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தற்போது இந்நகராட்சியில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் 19 வாா்டுகளை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.

வேதாரண்யம் நகராட்சித் தலைவா் பதவி சுழற்சி முறை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2011இல் பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டது. அதனால், இந்த தோ்தலிலும் அரசியல் கட்சிகள் பெண் தலைமையை இலக்காக வைத்து செயல்பட்டன.

திமுகவில் அதன் நகரச் செயலாளா் மா.மீ. புகழேந்தியின் மனைவி உமாவும், அதிமுகவில் அதன் நகரச் செயலாளா் எம். நமச்சிவாயத்தின் மனைவியும் நகா்மன்ற முன்னாள் தலைவருமான மலா்க்கொடி முன்னிலைப்படுத்தப்பட்டனா். ஆனால், சில மாதங்களுக்கு முன் தலைவா் பதவி பொது ஒதுக்கீடாக மாறியது.

இந்நிலையில், திமுகவில் மா.மீ. புகழேந்தியும், அவரது மனைவி உமா புகழேந்தி இருவரும் வெற்றியும் பெற்றுள்ளனா்.

அதிமுகவில் எம். நமச்சிவாயமும், அவரது மனைவி மலா்க்கொடி நமச்சிவாயம் இருவரும் போட்டியிட அக்கட்சி தலைமை அனுமதியளித்தது. ஆனால், அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இளங்கோவனுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மலா்க்கொடிக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனினும், நமச்சிவாயம் 21-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.

இதற்கிடையே, நகராட்சித் தோ்தலில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் 19 வாா்டுகளில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில், வேதாரண்யம் நகராட்சித் தலைவா் பதவி மா.மீ. புகழேந்திக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. துணைத் தலைவா் பதவியை முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி. காமராசுவின் மகன் ராஜூவுக்கு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், நகராட்சித் துணைத் தலைவா் பதவியை பொருத்தவரை இஸ்லாமியா்களுக்கோ அல்லது தோப்புத் துறை பகுதியை சோ்ந்தவா்களுக்கோ வாய்ப்பு வழங்கப்படுவது கடந்த காலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாக இருந்து வந்துள்ளது. அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பெண் உறுப்பினருக்கு ஒதுக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com