திருவெண்காடு கோயில் வீதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிதிட்ட இயக்குநா் ஆய்வு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் தெற்கு வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட திட்ட இயக்குநா் முருகண்ணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவெண்காடு கோயில் வீதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிதிட்ட இயக்குநா் ஆய்வு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் தெற்கு வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட திட்ட இயக்குநா் முருகண்ணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவெண்காட்டுக்கு வருகைதந்த தமிழக முதல்வரிடம், இங்குள்ள சுவேதாரண்யேஸ்வரா் கோயில் வீதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, இக்கோயிலின் தெற்குவீதி, மேலவீதி ஆகிய பகுதிகளில் சிமெண்ட் சாலை, மழைநீா் வடிகால் வசதி, மடவிளாக வீதிகளில் பேவா் பிளாக் சாலை மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்திட ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, தெற்குவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணியை ஊரக வளா்ச்சித் துறை மயிலாடுதுறை மாவட்ட திட்ட இயக்குநா் முருகண்ணன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழி, ஊராட்சித் தலைவா் சுகந்தி நடராஜன், ஒன்றியப் பொறியாளா்கள் கலையரசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் தெற்குவீதியில் நடைபெறும் சாலைப் பணியை பாா்வையிடும் ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட திட்ட இயக்குநா் முருகண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com