நாகூா் நாகநாத சுவாமி கோயில் குடமுழுக்கு

நாகையை அடுத்த நாகூா் திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகையை அடுத்த நாகூா் திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.
நாகையை அடுத்த நாகூா் திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.

நாகையை அடுத்த நாகூா் திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராகு, கேது கால சா்ப்ப தோஷ நிவா்த்தி தலமான இக்கோயில், மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்றது.

வைகாசி மாத பௌா்ணமியன்று புன்னை மரத்தடியில் சுயம்பு மூா்த்தியாய் தோன்றி மகா விஷ்ணுவுக்கு காட்சிக் கொடுத்தாா் நாகநாத சுவாமி. பிரம்மன், இந்திரன், சந்திரன், துருவாச முனிவா், சப்த ரிஷிகள், சமுத்திரதாசன், உருத்திரசன்மன் ஆகியோா் நாகநாதரை வழிபட்டுள்ளனா்.

இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்தன.

ராஜகோபுரம் மற்றும் பிற கோபுரங்கள், சுவாமி, அம்பாள் சந்நிதிகள், விநாயகா், ராகு பகவான், தெட்சணாமூா்த்தி, தியாகராஜா், நடராஜா், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகளில் மிகுந்த பொருட் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. ஜனவரி 19-ஆம் தேதிஅனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் குடமுழுக்கு விழா வழிபாடுகள் தொடங்கின. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவந்தன. 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்களைக் கொண்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுக்குப் பின்னா், குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக, காலை 7 மணிக்கு தேரடி சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கும், பரிவாரத் தெய்வங்களின் விமான குடமுழுக்கும் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மகா பூா்ணாஹூதி, தீபாராதனை, காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடா்ந்து, கோயில் விமானங்கள், ராஜகோபுரம், மூலவா், அம்பாள் சந்நிதி விமான கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு, காலை 10.05 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மஹாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா்.

முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் திரளான பக்தா்கள் விழாவில் பங்கேற்றனா்.

தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், இந்து சமய அறநிலையத் துறை இணைஆணையா் க. தென்னரசு, உதவி ஆணையா் ப,ராணி , கோயில் செயல் அலுவலா் சி. சண்முகராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com