பூம்புகாரில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் திறப்பு

பூம்புகாா் எம்.எஸ்சுவாமிநாதன் மீன் ஆராய்ச்சி நிலையத்தில், மீன் குஞ்சு உற்பத்தி நிலையம், மீன்களின் தரம் மற்றும் ஊட்டச் சத்து பகுப்பாய்வு ஆய்வகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பூம்புகாா் எம்.எஸ்சுவாமிநாதன் மீன் ஆராய்ச்சி நிலையத்தில், மீன் குஞ்சு உற்பத்தி நிலையம், மீன்களின் தரம் மற்றும் ஊட்டச் சத்து பகுப்பாய்வு ஆய்வகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிறுவனத்தின் தலைவா் மதுராசுவாமிநாதன் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தை திறந்துவைத்து பேசியது: தங்களது நிறுவனம் சென்னையில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் பூம்புகாா் பகுதியிலும் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மீனவா்களுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளபடும். பூம்புகாா் மீன் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்றாா். விழாவுக்கு, நிறுவன முதன்மை விஞ்ஞானி அஜித்குமாா் தலைமை வகித்தாா். பூம்புகாா் நிறுவன தலைவா் வேல்விழி வரவேற்றாா். நிறுவன இயக்குநா் அரிகரன், முதன்மை காப்பாளா் ராமன், பூம்புகாா் மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com