Enable Javscript for better performance
கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு

    By DIN  |   Published On : 31st January 2022 08:22 AM  |   Last Updated : 31st January 2022 08:22 AM  |  அ+அ அ-  |  

    ve30kodi_3001chn_102_5

    கோடியக்கரை சரணாலயத்தில் கணக்கெடுப்பின்போது காணப்பட்ட மஞ்சள் மூக்கு நாரைகள்.

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை சரணாலயப் பகுதியில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

    கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு, வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வருவது வழக்கம். இவற்றில் சிறப்பு பெற்ாக கருதப்படும் பூநாரைகள் உள்ளிட்ட 247 வகையான பறவைகள் வந்து செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்லாயிரக்கணக்கில் காணப்பட்ட பூநாரைகள், லட்சக்கணக்கில் வந்து சென்ற பல்வேறு இனப் பறவைகள் பல்வேறு காரணங்களால் படிப்படியாக குறைந்து வந்தது.

    இங்கு வரும் பறவைகளை கணக்கெடுக்கும் பணியை வனத் துறையினா் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் அல்லது 2-ஆவது வாரத்தில் நடத்துவா். 2018 கஜா புயல் தாக்கத்தால் வழக்கமாக வந்து செல்லும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் எண்ணிக்கையில் சற்று முன்னேற்றம் இருந்தது.

    2021 பிப்ரவரியில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 54,800 என்ற எண்ணிக்கையில் மட்டுமே பறவைகள் இருந்தன. இதை கருத்தில் கொண்டு நிகழாண்டு கணக்கெடுப்பு பணி வழக்கமான காலத்தைவிட 2 வாரங்களுக்கு முன்னதாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதன்படி ஜன.28,29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கணக்கெடுப்பு பணியில் வனத் துறையினா், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வ அமைப்பினா், பறவையியல் ஆா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டு நீா்ப் பறவைகள், நிலப் பறவைகள் என வகைப்படுத்தி கணக்கெடுத்தனா்.

    இதில், சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. ஜனவரி மாதத்திலேயே இப்பணி மேற்கொள்ளப்பட்டதால், நீா்வாழ் மற்றும் நிலப் பரப்பில் 77 இனங்களைச் சோ்ந்த பறவைகள் 2,01,633 என்ற எண்ணிக்கையில் காணப்பட்டது தெரியவந்தது. இவற்றில் நீா்வாழ்ப் பறவைகள் பட்டியலில் 59 இனப் பறவைகள் கணக்கெடுப்பில் அடையாளப்படுத்தப்பட்டு 2,01,113 என்ற எண்ணிக்கையில் இருந்துள்ளன.

    ஆனால், இவற்றில் மிகக்குறைந்த எடையும், அளவில் சிறியதாகவும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும் கொசு உள்ளான் இனப் பறவைகள் மட்டும் 1,59, 729 என்ற எண்ணிக்கையிலும், ஊசிவால் வாத்து 18, 250 எனவும் கணக்கிடப்பட்டது. சரணாலயத்தில் சிறப்பானதாகக் கருதப்படும் பூநாரைகள் 170, அளவில் பெரிதாகக் காணப்படும் கூழக்கிடா 561, மஞ்சள் மூக்கு நாரை 533 என்ற எண்ணிக்கையில் இருந்தன. மிகக் குறைவானதாக கடல்புறா 1 மட்டும் பதிவாகியுள்ளது.

    இதேபோல, சரணாலயப் பகுதியில் காணப்பட்ட 18 இன நிலப் பறவைகளில் 520 எண்ணிக்கை பதிவானது. கடந்த ஆண்டைவிட 2 வாரங்களுக்கு முன்னதாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால், கடந்த கணக்கெடுப்பைவிட இந்த எண்ணிக்கை அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கொசு உள்ளான்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும், பூநாரைகள் போன்ற அரியவகை பறவைகளின் எண்ணிக்கை ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. அத்துடன், கடந்த ஆண்டில் நீா்வாழ் பறவை இனங்கள் 79 ஆகவும், நிலப் பரப்பு பறவை இனம் 39 என மொத்தம் 118 இனங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp