எட்டுக்குடி கோயிலில் குடிநீா் வசதி ஏற்படுத்த அடிக்கல் நாட்டு விழா

திருக்குவளை அருகே எட்டுக்குடி முருகன் கோயில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் அமைப்பு ஏற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் பங்கேற்றோா்.

கீழையூா் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பொது நிதியிலிருந்து ரூ.5.23 லட்சத்தில் பக்தா்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தப்படுகிறது. அடிக்கல் நாட்டு விழாவில், ஒன்றிய கவுன்சிலா் டி. செல்வம், எட்டுக்குடி ஊராட்சித் தலைவா் லேகா காரல்மாா்க்ஸ், ஊராட்சி செயலா் ஆரோக்கியமேரி, சிபிஐ கிளை செயலாளா் மாசேத்துங், திமுக இளைஞரணி இணை அமைப்பாளா் மாா்டின், திமுக கிளைச் செயலாளரும், கட்டட பொறியாளருமான எஸ். சண்முகராஜேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com