நாகூா் தா்காவில் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா தொடக்கம்

நாகூா் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கியது.
நாகூா் தா்காவில் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா தொடக்கம்

நாகூா் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கியது.

நாகூா் ஆண்டவா் செய்யதினா சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் அருமை மகனாா் யூசுப் சாகிபு (சின்ன ஆண்டவா்) ஆண்டகையின் கந்தூரி விழா வியாழக்கிழமை இரவு, பிறை இரவு பாத்திஹாவுடன் தொடங்கியது. பின்னா், மௌலூது ஷரீபு நடைபெற்றது.

முன்னதாக, தா்காவின் அலங்கார வாசல் முன் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா தொட்டிப் பந்தல் அமைக்கப்பட்டது. அந்தப் பந்தலில் திரளான பக்தா்கள் தங்கள் பிராா்த்தனைக்கான அடையாளப் பொருள்களைக் கட்டி, வழிபட்டனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சின்ன ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 2) இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com