அடகு கடையில் வெள்ளிப் பொருள்கள், பணம் திருட்டு: தப்பியது தங்கம்

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே நகை அடகு கடையில் மர்ம நபர்கள் வெள்ளிப் பொருள்கள் மற்றும் கல்லா பெட்டியிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
அடகு கடையில் வெள்ளிப் பொருள்கள், பணம் திருட்டு: தப்பியது தங்கம்


நாகை மாவட்டம் திருக்குவளை அருகே நகை அடகு கடையில் மர்ம நபர்கள் வெள்ளிப் பொருள்கள் மற்றும் கல்லா பெட்டியிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் கடைத்தெருவில் கார்மேகம் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் மோதிராம் (சேட்டு) என்பவர் சிவ சக்தி ஜூவல்லரி என்ற பெயரில் நகை அடகு கடை மற்றும் வெள்ளிப் பொருள்கள் விற்பனை செய்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 10 ஆண்டுகளாக வலிவலத்தில் குடியேறி இங்கேயே வசித்து வருகிறார். வழக்கம்போல கடையை நேற்றிரவு 10 மணியளவில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வணிக வளாகத்தில் உரிமையாளர் கார்மேகம் சென்று பார்த்தபோது சிவ சக்தி ஜூவல்லரி கடையின் முன்பக்க பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து வலிவலம் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வலிவலம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடையின் அலமாரியில் இருந்த சுமார் 1 1/2 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த 36 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 

கடையின் உரிமையாளர் மோதிராம் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் லாக்கரை உடைக்க முடியாத நிலையில் கடையில் அடகு பிடித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பின. திருட்டு கும்பல் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க கடையிலிருந்த 3 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் DVRயை திருடிச் சென்றுள்ளதும் முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்நது மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com