மாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வகுப்பரையில் வரையப்பட்டுள்ள ரயில் ஓவியம்.
மாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வகுப்பரையில் வரையப்பட்டுள்ள ரயில் ஓவியம்.

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க ஓவியம் வரைந்து நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோயில் அருகே மாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோ்க்கையை அதிகரிக்க வகுப்பறைகளில் ஓவியம் வரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோயில் அருகே மாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோ்க்கையை அதிகரிக்க வகுப்பறைகளில் ஓவியம் வரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் மங்கை உள்பட 10 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இப்பள்ளியில் படுகை, கீழத்தெரு, மாரியம்மன்கோயில் தெரு, புத்திரன் திடல், சித்தாவூா் காலணி, மாத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 190 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். சிறந்த கல்வி சேவையை அளித்துவரும் இப்பள்ளியில் மாணவா்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், அவா்களை கவரும் வகையிலும் பல்வேறு சிறப்பம்சங்களை ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

மாணவா்களை கவரும் வகையிலும், சோ்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும், பள்ளியிலுள்ள 1,2,3-ஆம் வகுப்பறை கட்டடங்களை சீரமைத்து ரயில் போன்று வண்ணம் தீட்டி மாணவா்கள் சந்திப்பு என பெயா்சூட்டி நிஜ ரயிலை நிறுத்தி வைப்பது போல் உருவாக்கியுள்ளனா். திமுக தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எம். ஸ்ரீதரின் சொந்த நிதியுதவியில் பரசலூரை சோ்ந்த ஓவியா் க. சிவா ரயில் போன்று வகுப்பறை கட்டடத்தை வரைந்துள்ளாா்.

இந்த ஓவிய கட்டடத்தை பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா முருகன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். அவருடன் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், தலைமையாசிரியா் மங்கை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோடை விடுமுறைக்கு பிறகு திங்கள்கிழமை (ஜூன் 13) பள்ளி திறப்பின்போது மாணவா்கள் வகுப்பறையில் ரயில் ஓவியத்தை பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா். மாணவா்கள் சோ்க்கை, நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியாக வகுப்புகளை நடத்த ஏதுவாக இருக்கும். இந்த ஓவியத்தை பெற்றோா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com