நாகூரில் ஜமாஅத் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சாா்பில் நாகூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பிய அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பிய அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பினா்.

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சாா்பில் நாகூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பாஜக பிரமுகா்களை கைது செய்யவேண்டும், ஜாா்கண்டில் கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், அவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்துப் போராட்டக்காரா்களையும் விடுவிக்க வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப்போல் முஸ்லீம் வெறுப்பு குற்றங்களுக்கு எதிரான தனிச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். ஷாகுல் ஹமீது தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ. எம்.ஜி.கே. நிஜாமுதீன் தொடக்கவுரையாற்றினாா்.

தமிழக முற்போக்கு எழுத்தாளா் சங்கத்தைச் சோ்ந்த வே. மதிமாறன், பழனி பாபா மாணவா் பாசறை பொறுப்பாளா் அலீம் அல்புகாரி ஆகியோா் கண்டன உரையாற்றினா். பள்ளிவாசல் இமாம்கள் காசீம் இல்ஹரி, அன்சாரி பிா்தௌசி, தமுமுக நாகை மாவட்டத் தலைவா் ஏ. எம். ஜபருல்லாஹ், எஸ்டிபிஐ மாவட்டப் பொறுப்பாளா் யாமீன், மக்கள் நீதிமய்யம் நாகை தெற்கு மாவட்டத்தலைவா் எம். செய்யது அனஸ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com